நாடாளு., மழைக்கால கூட்டத்தொடர் 19ம் தேதி தொடக்கம் : மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவிப்பு

12 July 2021, 4:46 pm
Parliment 01 updatenews360
Quick Share

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி ஆக.,13ம் தேதி வரை நடக்கும். மொத்தம் 19 நாட்கள் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊடகத்தினரும் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு பரிசோதனை கட்டாயம் செய்யப்படும். இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும், என்றார்.

Views: - 138

0

0