எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தல் வேட்பாளர்களின் செலவுத் தொகை 10% அதிகரிப்பு : மத்திய அரசு

20 October 2020, 4:15 pm
Central Goverment Order-Updatenews360
Quick Share

டெல்லி : எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுத் தொகை 10 % அதிகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த மாத இறுதியில் பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல, ஒரு மக்களவை தொகுதி மற்றும் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்கனவே அறிவித்துள்ள செலவுத் தொகைக்குள் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இயலாது என்றும், எனவே, வேட்பாளர் செலவுத் தொகையை அதிகரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுத் தொகையை 10 % அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.77 லட்சம் வரை செலவு செய்யலாம். இது முன்னதாக ரூ.70 லட்சமாக இருந்தது.

இதேபோல, சட்டப்பேரவைத் தேர்தல்களில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு செய்யும் வரம்பு ரூ. 28 லட்சத்திலிருந்து ரூ.30.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 29

0

0