காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது: சிவராஜ்சிங் சவுகான்

24 August 2020, 10:52 pm
Quick Share

போபால்: காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று ஓராண்டை கடந்து விட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையுள்ள தலைமை தேவை என ஒரு பிரிவினர் கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசுகையில், பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஜோதிராதித்யா மீது பொய்யான குற்றம்சுமத்தி வெளியேற்றினர். இப்போது அதே குற்றச்சாட்டை கபில் சிபல் , குலாம்நபி ஆசாத் போன்ற சீனியர் தலைவர்கள் மீதும் சுமத்தியுள்ளனர். இப்போது நடந்தது கட்சியின் செயற்குழு அல்ல. நாடகம். காங்கிரஸ் கட்சி இனி கரையேறாது. அந்தக் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. என தெரிவித்தார்.

Views: - 0

0

0