முல்லைப் பெரியாறு அணை விவகாரம்… அதிமுகவை முந்திய பாஜக : விழிபிதுங்கி நிற்கும் திமுக

Author: Babu Lakshmanan
6 November 2021, 7:58 pm
Quick Share

முல்லைப் பெரியாறு அணையை முன்னறிவிப்பின்றி திறந்து விட்ட திமுக அரசைக் கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, கேரளாவின் கோரிக்கையை ஏற்று,அணையில் இருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 138 அடியாக இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதால், அணையை கேரளாவுக்கு அடகு வைத்ததற்கு நிகராகிவிட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் அணையை திறந்து விட்ட தமிழக அரசைக் கண்டித்து அதிமுக வரும் 9ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியினர் கூடி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்களில் விவசாயிகளின் நலனுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுகவை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை அறிவித்துள்ளார். வரும் 8ம் தேதி இந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, பாஜக முந்திச் செல்வது அரசியல் களத்தில் பெரிதும் பேசுபொருளாகிவிட்டது.

Views: - 448

0

0