இது ஒன்றுதான் வழி… முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : கேரள அரசுக்கு நடிகர் பிருத்வி ராஜ் கோரிக்கை!!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 8:45 pm
kerala cm - pinarayi vijayan - pritvi raj - updatenews360
Quick Share

கேரளா : முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசுக்கு நடிகர் பிருத்வி ராஜ் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, அணையில் 142 அடி வரை தண்ணீரை சேமிக்கலாம். அதன்பிறகு, அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். தற்போது, கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கேரள அரசு, தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

Mullai Periyar dam- Updatenews360

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணை நிரம்பினால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் என்றும், அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி எங்களை காப்பாற்றுங்கள் என கேரள மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், 100 ஆண்டுகளுக்கும் பழமையான முல்லைப்பெரியாறு அணையை கைவிட வேண்டும் என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இந்தத் தகவல் வதந்தி என்று கூறப்படுகிறது. இருப்பினும், கேரளாவின் பிரபலங்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நடிகர் பிருத்வி ராஜ் கேரள அரசுக்கு டுவிட்டர் மூலம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதில், “உண்மை எதுவாக இருந்தாலும், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும்.. 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அணையை தொடர்ந்து பயன்படுத்துவது சரியாக இருக்காது. அரசியல், பொருளாதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு எது சரியானதோ அதை செய்ய வேண்டும். இந்த முறையை மட்டுமே நாம் நம்ப முடியும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற பிருத்வி ராஜின் இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

Views: - 245

0

1