முல்லை பெரியாறு அணை விவகாரம் : நீர் திறப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு.. அமைச்சர்கள் திடீர் ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2021, 2:47 pm
Minister Mullai periyar - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தது முல்லை பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி ,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும். 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என கடந்த 2014 அதற்கு முன்பு 2006 என இரண்டு முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க ஒரு சிறப்பு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 130 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 138.5 அடியாக உயர்ந்தது.
இதற்கிடையே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையில் விசாரிக்கப்பட்டது.

அப்போது இரு மாநில தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்தனர். அதில் முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்குழு பரிந்துரைத்துள்ள 139.50 அடி வரையிலான தண்ணீர் நவம்பர் 11ஆம் தேதி வரை தேக்கி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவு வருவதற்கு முன்பே கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களிடம் இருபத்தி ஒன்பதாம் தேதி காலை 7.30 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட போவதாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் பொதுப்பணி துறையினர் முன்னிலையில் அணை இருபத்தி 9 தேதி காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 534 அடி உபரி நீர் இரண்டு மதகு பகுதியிலிருந்து கேரளா பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்ட விவசாயிகள் மட்டும் பொதுமக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியது. தேனி மாவட்ட மக்கள் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என பல நாட்கள் கோரிக்கை வைத்திருந்த இந்த சூழலில் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பணித்துறையினர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இதன் நிலையில் அடுத்த ஒரு சில நாட்களிலேயே அணையிலிருந்து மேலும் மற்றொரு மதகுகள் வழியாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை இறந்து விட்டனர். இந்த நிலையில் அடுத்த ஒரு சில நாட்களில் முல்லைப் பெரியாறு அணையில் ‌ மத்திய ஐந்து பேர் கொண்ட துணை குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, நீர் கசிவு, கேலரி கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர்கள் சட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கூடுதல் தண்ணீராக வினாடிக்கு 2305 கன அடி தண்ணீர் திறந்தது .

இந்த நிலையில் தற்போது இன்று முல்லைப் பெரியாறு அணையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையிலான அமைச்சர் குழு மற்றும் தமிழக அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

Views: - 515

0

0