​’யாரு ஏழை… உதய சூரியனுக்கா ஓட்டு போட்டீங்க..?’​ மூதாட்டியிடம் எகிறிய திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 12:49 pm
Quick Share

திருப்பூர்; காங்கேயம் நகராட்சி பகுதியில் சாலையோர பெண் வியாபாரியிடம், ‘ஏம்மா நீங்க எல்லோரும் உதய சூரியனுக்கா ஓட்டு போட்டிங்க’ எனக்​ கூறி நீ வா.. போ… என ​காங்கேயம் நகராட்சி தலைவர் ஒருமையில் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் சாலைகளின் ஓரம் பழங்கள், கீரைகள், காய்கறிகளை விற்று வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக மார்க்கெட் கடைகளை நடத்தி வருபவர்கள் சாலையோர வியாபாரிகளால் தங்களது வருமானம் பாதிப்பாதாகவும், அதனால் நகராட்சி எல்லையில் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்துமாறு நகராட்சி தலைவரான சூர்யபிரகாஷிடம் ​ கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் நகராட்சி வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்க​ளுடன் ​சாலையோர கடைகளுக்கு சென்ற காங்கேயம் நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ், கடைகளை நடத்த கூடாது என சாலையோர வியாபாரிகளிடம் தெரி​வைத்துள்ளார்.​

அப்போது பழம் விற்று வரும் மூதாட்டி ஒருவர், “நாங்க ஓட்டு போட்டதுனால தான சாமி, நீங்க பதவி அதிகாரத்துக்கு வந்தீங்க, ஏழைகளின் வயிற்றுல அடிக்காதீங்க,” என நகராட்சி தலைவரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இதனால், கடும் கோபத்துடன் காரில் இருந்து இறங்கிய நகராட்சி தலைவர், ‘ஏம்மா யாரு ஏழைக, நீங்க எல்லோரும் உதய சூரியனுக்கா ஓட்டு போட்டிங்க​,​ சும்மா அர்த்தம் கெட்ட தனமாக பேசிட்டு இருக்காத.. ஹைவேஸ் ரோட்டுல கடை போடக் கூடாதுனா போடக்கூடாது,’ என ஒருமையில் ​பேசியுள்ளார்.​

நகராட்சி தலைவர் ​ ஏழை மக்களிடம் ஒருமையில் வா போ ​என ​பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 375

1

0