நீங்க பண்ற நாடகத்தை முருகன் பார்த்துட்டுதான் இருக்காரு : திமுக அரசுக்கு அண்ணாமலை வார்னிங்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2024, 7:56 pm

கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய நிலையில் இந்த ஆண்டு முருகனுக்கு மாநாடு நடத்தியுள்ளது திமுக என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; கடந்த ஆண்டு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாநாடு. இந்த ஆண்டு முருகப் பெருமானுக்கு பிரமாண்டமான கொண்டாட்டத்தை நடத்தும் ஒரு மாநாடு.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு முன்னிலையில் நடந்தது பொதுவான அம்சமாகும். மக்களின் கோபத்தை உணர்ந்தால் திமுக தனது திரைக்கதையை துளி துளியாக மாற்றி விடும்.

ஆனால் முருகப்பெருமான் இந்த நாடகத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிட கூடாது.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!