‘உனக்காக காத்திருக்கேனு சொன்ன. நீ கேக்கல.. போயிட்ட’ : எஸ்.பி.பி.யின் மறைவால் கண்ணீர் விட்ட இளையராஜா (வீடியோ)

25 September 2020, 6:05 pm
sp-balu-ilaya - updatenews360
Quick Share

சென்னை : உடல்நலக்குறைவால் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு அவரது நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா கண்கலங்கி இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைய வேண்டும் என்று உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.

மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளளார். அதில், “பாலு சீக்கிரம் எழுந்து வா, உன்ன பாக்க நா காத்திருக்கேனு நான் சொன்ன… நீ கேக்கல.. போயிட்ட. எங்க போன, கந்தர்வர்களுக்காக பாட நீ போயிட்டயா.. உலகம் இங்க சூனீயமா போச்சு. பேசுரதுக்கு பேச்சு வருல, சொல்ரது வார்த்தை வருல. என்ன சொல்ரதுனே தெரியல. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவிருக்கு. இதுக்கு அளவே இல்ல,” எனக் குறிப்பிட்டுள்ளார்.