மர்மமாய் குவிந்த 5,000 ஓட்டு! கொந்தளிக்கும் சுயேச்சைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 5:31 pm
5 Thousand Votes- Updatenews360
Quick Share

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பல இடங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது, தற்போது மெல்ல மெல்ல வெளியே தெரியத் தொடங்கி இருக்கிறது.

Tamil Nadu local body elections on the way, state election commission  issued guidelines | Elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள்  தொடங்கின | Elections News in Tamil

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் குளறுபடி

தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட 12-ம் தேதி பிற்பகல் முதலே இது தொடர்பாக அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

அதிமுக கண்டனம்

அப்போது அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், “இந்தத் தேர்தலில் பல வன்முறைகளை கட்டவிழ்த்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே முனைப்போடு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி திமுக வெற்றி பெற்றிருக்கிறது. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மிகவும் தாமதமாக நடத்தப்பட்டுள்ளது.

T.N. CM writes to e-commerce majors inviting investments - The Hindu

பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகும் அந்த வெற்றியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையமும், தேர்தல் அலுவலர்களும் முனைப்பு காட்டவில்லை. பல இடங்களில் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்து இருந்தது.

திமுக அரசை சாடிய ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, “வேட்புமனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்துக் கட்டங்களிலும் அரசு எந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்கு பணிந்தது. பாமக வென்றிருக்க வேண்டிய பல இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன” என்று மாநில தேர்தல் ஆணையத்தையும், திமுக அரசையும் சாடியிருந்தார்.

Dr. Ramadass congrats Tamil Nadu students who have passed the Civil  Services Examination || சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக  மாணவர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

மாநில தேர்தல் ஆணையம் விசுவாசம்

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விடுத்த அறிக்கையில், “உள்ளாட்சித் தேர்தலைப் பார்க்கும்போது மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்குக் காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல்துறையை மிஞ்சிவிட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை. பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மிகத் தாமதமாகவும், சில இடங்களில் மாற்றுக் கட்சியினரை வெளியேற்றிய பின் ரகசியமாகவும் நடைபெற்றது. உண்மைக்கு மாறாக வாக்கு எண்ணிக்கைகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டன” என்று குற்றம் சாட்டினார்.

I am a natural fit in the BJP': Former IPS officer K Annamalai set to join  party | The News Minute

சுயேட்சைகள் கடும் எதிர்ப்பு

தேர்தலில் தோல்வி ஏற்படும் போதெல்லாம் பொதுவாக எதிர்க்கட்சிகள் வழக்கமாக கூறும் காரணங்கள் இவை என்றே முதலில் கருதப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த 9 மாவட்டங்களிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்து விட்டதாகக் கூறி சுயேச்சை வேட்பாளர்கள், இன்று வரை ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பெட்டிகளை மாற்றியதாக வெளியான சி.சி.டி.வி காட்சி

அதுவும் குறிப்பாக தங்களது பகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட சொந்த செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் பொதுமக்களுடன் திரண்டு சாலை மறியல், வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை என்று பல்வேறு போராட்டங்களில் குதித்திருப்பது, உள்ளாட்சித் தேர்தல் உண்மையிலேயே நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

உதாரணத்துக்கு சில சம்பவங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட கல்யாணி பெரியநாயகம் என்பவர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில மணி நேரம் கழித்து திமுக சார்பில் போட்டியிட்ட ஜெமிலா பாண்டுரங்கன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை நடப்பது எப்படி?- மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் |  How will the counting of votes take place What are the procedures followed  in the centers | Puthiyathalaimurai ...

இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் கல்யாணி பெரிய நாயகத்தின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே கூடியிருந்த பெண்கள் உள்பட அனைவரையும் போலீசார் விரட்டி அடித்துள்ளனர்.

எனினும் மறுநாள், அதே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி கலைந்து போகச் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021: வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு நிலை  என்ன? - BBC News தமிழ்

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர்களை தோற்றதாக அறிவித்துவிட்டு, திமுக ஆதரவு வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்ததாக கூறி சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் தொடர்ந்து, இரண்டு நாட்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் சரியான பதிலை தெரிவிக்காததால், அவர்கள் குரோம்பேட்டை அருகே ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டு சுமார் அரை மணிநேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தும் இருக்கின்றனர். அவர்களும் போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

மர்மமாய் குவிந்த 5,000 ஓட்டு

இதை விட ஒரு பெரிய கேலிக்கூத்து, இதே பகுதியில் அமைந்துள்ள வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தேர்தலில் அரங்கேறியுள்ளது. இந்த ஊராட்சியில் தேர்தலுக்காக 27 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றில் 11 ஆயிரத்து 501 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஓட்டு எண்ணிக்கையின் போது, 16 ஆயிரத்து 700 வாக்குகள் இருந்துள்ளது. எப்படி கூடுதலாக 5199 ஓட்டுகள் அதிகமாக வந்தது? என்ற கேள்விக்கு தேர்தல் அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு  எண்ணும் பணி தாமதம் | Local Election Ballot: Delays in counting of votes in  different parts of Tamil Nadu - hindutamil.in

இதனால் அதிர்ச்சியடைந்த சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களுடைய வெற்றிவாய்ப்பை தடுக்கும் விதமாக தேர்தல் அதிகாரிகள் இந்த தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக மாநிலத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு அதிகமாக கணக்கு காட்டிய வாக்குகளை ரத்து செய்யவேண்டும் அல்லது மறுதேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இதுபோல தேர்தல் நடத்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிமுக, பாமக, பாஜக குற்றம்சாட்டி உள்ளன.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்,” ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் இதுபோல பெருமளவில் முறைகேடுகள், குளறுபடிகள் நடந்துள்ளதாக முதல்முறையாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாக இருக்க வாய்ப்பும் உள்ளது.

ஏனென்றால் வெற்றி பெற்றவர் பல மணி நேரம் கழித்து தோற்றதாக அறிவிக்கப்படுவதும் தோல்வி கண்டவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதும் யாராலும் நம்ப முடியாத ஒன்று. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கூட இப்படித்தான் நடந்தது.

DMK Chief MK Stalin Elected as Legislature Party Leader, To Be Sworn-in as  CM on May 7

மேலும் இந்த ஊரக ஊராட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்தபோது 73 சதவீதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 74 சதவீதமும் பதிவானதாக முதலில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. பொதுவாக, தேர்தல் முடிந்த பிறகு மறுநாள் வாக்குப்பதிவு பற்றிய விவரங்களை துல்லியமாக அறிவிக்கும்போது ஒன்று முதல் ஒன்றரை சதவீத வாக்குகள்தான் கூடுதலாகி இருக்கும். ஆனால் இந்தத் தேர்தலில் அது ஐந்தாறு சதவீதம் வரை அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.

அதாவது சராசரி ஓட்டுப்பதிவு கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை வந்துவிட்டது. கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 18 சதவீத வாக்குகளுக்கும் மேல் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது நம்புவதற்கு கடினமாக உள்ளது. என்னதான் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்காளர்கள் திபுதிபுவென்று வந்து ஓட்டு போட்டாலும் கூட இத்தனை சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

ரிசல்ட்.. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. பதிவான வாக்குகள் இன்று எப்படி  எண்ணப்படுகின்றன தெரியுமா? | Local Body Elections Result, and How Votes are  counted - Tamil Oneindia

பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படவில்லை. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் முகவர்களும், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்களும் வெளியேற்றப்பட்ட பிறகோ அல்லது அவர்கள் வரும் முன்போ வாக்குச் சாவடியில் இருந்த அரசு அலுவலர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுமார் 150 முதல் 200 ஓட்டுகள் வரை முத்திரையிட்டு பதிவு செய்திருக்கலாம் என்பது எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் சந்தேகமாக உள்ளது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தல் வெற்றி வாய்ப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை எதிர்க்கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போதாவது இதுபோன்ற பெரும் குளறுபடிகளும், குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தல் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மக்களுக்கு அறவே நம்பிக்கை இல்லாமல் போய்விடும்” என்று அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.

Views: - 266

0

0