சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி…! தாமும் நிற்பதாக சீமான் அறிவிப்பு

16 August 2020, 2:20 pm
Seeman 02 updatenews360
Quick Share

சென்னை: சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை 2020க்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டத்தை அறிவித்து இருந்தது. அதன்படி அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

அதாவது அவரவர் வீடுகளின் முன்பு புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும் அவரவர் வீடுகளின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கை என்பது இந்தி, இந்தியா என்ற கட்டமைப்பிற்காக திணிக்கப்படும் முயற்சி. அதை தான் இப்போது மத்திய அரசு செய்ய தொடங்கி இருக்கிறது.

இப்படி செய்யும் மத்திய அரசாங்கம் இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா? இந்தி வந்தால் நாட்டு மக்களிடையே பிளவு வரும்.

இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்பவர்கள் தமிழை படிக்கச் சொல்ல மறுக்கிறார்கள். அது ஏன்? அடுத்தாண்டு வரக்கூடிய சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும், இந்த தேர்தலில் நானும் போட்டியிட இருக்கிறேன் என்று கூறினார்.

Views: - 15

0

0