எம்.ஜி.ஆர் குறித்து அவதூறு! வெளிச்சத்துக்கு வந்த சீமானின் ஏமாற்று அரசியல் !!

24 December 2020, 9:31 pm
Seeman -Updatenews360
Quick Share

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் அனைத்துக்கட்சியினரும் அவரது கல்லறையில் பூத்தூவும் வேளையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் திடீரென்று அவர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி கல்வீசியிருப்பது சீமானின் ஏமாற்று அரசியலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் பெயரையும் அவர்களின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரையும் பயன்படுத்தி பிழைப்பு நடத்தும் சீமான், பிரபாகரனால் மதித்துப் போற்றப்பட்ட ஒரு தலைவரை விமர்சனம் செய்திருப்பது புலிகளின் ஆதரவாளர்களையும் தமிழின உணர்வாளர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

Did Seeman really meet LTTE Chief Prabhakaran? - Quora

தமீழீழ விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவரான பிரபாகரனும் தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் உலக நாடுகளில் வாழும் தமிழின உணர்வாளர்களால் ‘தமிழினத்தின் விடிவெள்ளி’ என்றும் ‘உலகத் தமிழர்களின் தேசியத் தலைவர்’ என்றும் போற்றப்படுகிறார். அவரை புகழ்வதன் மூலமாகவே பல அரசியல் தலைவர்கள் தங்களை தமிழர் தலைவர்களாகக் காட்டிக்கொள்ளும் நிலையும் இருக்கிறது. ஆனால், பிரபாகரனால் பாராட்டப்பட்ட புகழப்பெற்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள்.

prabakaran so | ஈழவிம்பகம்\ Eelam Images

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட சில தலைவர்களை மட்டுமே பிரபாகரன் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். இவர்களில் வைகோவும் நெடுமாறனும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள். ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கும் ஆயுதங்களை வாங்குவதற்கும் தனிப்பட்ட முறையிலும் தமிழக அரசு சார்பிலும் உதவிகள் செய்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை வளர்த்தவர். எம்.ஜி.ஆருக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான உறவு ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு போன்றது என்று இருவருக்கும் நெருக்கமான முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் போன்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

EPS, OPS pay tribute to MGR on 103rd birth anniversary- The New Indian  Express

இலங்கை அரசியல்வாதிகள் உள்பட அரசியல்வாதிகள் எவரையும் மதித்துப் பழக்கமில்லாத போராளியான பிரபாகரன், எம்.ஜி,ஆர் மறைந்தபோது வீர வணக்கம் செலுத்தி இரங்கல் செய்தி வெளியிட்டார்.. விடுதலைப்புலிகளின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. விடுதலைப் போரில் வீர மரணம் அடைந்த போராளிகளுக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhakaran alive? – tamilthought

ஆனால், எம்.ஜி.ஆர் ஈழத்துக்கு ஆதரவு தந்ததைத் தவிர வேறு என்ன செய்துவிட்டார் என்று சீமான் பேசியிருப்பது ‘ஈழ ஆதரவு என்பது முக்கியமான கொள்கையல்ல’ என்று அவர் கருதுவதையே காட்டுகிறது. எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மிகப்பெரிய போராளி இயக்கமாக உருவாக்குவதில் மிகப்பெரிய பங்காற்றியவர். எம்.ஜி.ஆர் புலிகளுக்கு நிதியை வாரி வழங்கியவர். அவர்களின் பெயரில் நிதி வசூலித்துப் ஈனப்பிழைப்பு நடத்தியவரல்ல. சீமான் இதுவரை வாய்கிழியப் பேசுவதைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்துவிட்டார்? கேட்பவர்கள் செவிடாகும் வகையில் ஒலிபெருக்கி முன்பு களமாடுவதால் சீமானைத்தவிர யாருக்கு லாபம்?

Opinion: 'Aayirathil Oruvan, MGR was truly a Man of the Millennium' -  DTNext.in

சீமான் தன்னையும் தனது கட்சியையும் வளர்ப்பதற்கும் முகவரி தேடுவதற்கும் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிவந்ததும் ஈழ ஆதரவுக் கொள்கையை அவர் போலியாகப் பேசி நடித்துவந்ததும் விளம்பரம் தேடிவந்ததும் வெளிப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் உண்மையான ஆதரவாளர்கள் யாரும் ‘ஈழ ஆதரவு’ என்பது முக்கியமானதல்ல என்றும் அது பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டிய கொள்கைதான் என்றும் கூறமாட்டார்கள். சீமான் உண்மையான விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல என்பதும் அவரது ஆமைக்கறி சாப்பிட்ட கதையெல்லாம் அண்டப்புளுகு என்பதும் ஏற்கனவே தமிழின உணர்வாளர்களுக்குத் தெரிந்ததுதான், ஆனால், ஈழ ஆதரவு என்பது முக்கியமான கொள்கையல்ல என்று அவர் கூறியிருப்பது அவரை முழுவதும் அம்பலப்படுத்தியுள்ளது.

Seeman stirs up a hornet's nest by glorifying Rajiv Gandhi killers - The  Federal

ஏற்கனவே, ஒரு அரசியல் வார இதழுக்கு சீமான் அளித்த பேட்டியில் ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இருந்தால் அவர் எந்த நாட்டில் இருக்கிறார்?” என்று எகத்தாளமாகக் கேட்டிருந்தார். பெரும்பாலான விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசின் அறிவிப்பையும் அன்று படம் காட்டப்பட்டதையும் நம்பவில்லை.

Prabhakaran's son believed to be dead: Sri Lanka army - Indian Express

புலிகளின் ஆதரவாளர்கள் தஞ்சாவூரில் விளாரில் அமைத்த நினைவிடத்தில் பிரபாகரனின் பிள்ளைகள் சார்லஸ். பாலச்சந்திரன் ஆகியோருக்கு மட்டுமே சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கப்படுவதில்லை என்பதால் பிரபாகரன் சிலை வைக்கப்படவில்லை என்று நெடுமாறன் விளக்கமளித்துள்ளார்.

Nedumaran and his 2,000 books | India News,The Indian Express

ஆனால், பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று சிங்கள உளவுத்துறையும் தமிழர்களுக்கு எதிரான அரசுகளின் உளவுத்துறைகளும் தீவிரமாக விசாரித்துவருவதாகக் கூறப்படும் கேள்விகளை சீமான் எழுப்பியது அவர் மீது பெரும் சந்தேகத்தை எழுப்பியது.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறது. அவர்களின் கொடியையும் பிரபாகரன் படத்தையும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொடியைப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், சீமான் தனது கட்சியின் கொடியாக புலிக்கொடியை உயர்த்தி வருகிறார். அந்தக் கொடியைப் பயன்படுத்துவதை மத்திய அரசு இதுவரை எதிர்க்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதுதான் ‘நாம் தமிழர்’ கட்சி தொடங்கப்பட்டது. காங்கிரஸ் அரசின் ஆதரவுடன் ஈழ ஆதரவுக் கொள்கையை உண்மையாகப் பேசுவோரை எதிர்க்கவும் பிரித்தாளவும் சீமான் கட்சி தொடங்கினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அவர் பதில் தரவில்லை.

Naam Tamilar Katchi - Wikipediam.org

‘ஈழ ஆதரவுக் கொள்கை’ பேசுவதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் இருந்தால் அது உண்மையான தமிழின உணர்வாளர்களுக்குப் போகாமல் சீமானுக்குப் போக வேண்டும் என்றும் தமிழின உணர்வாளர்களைக் குழப்பி அவர்களைப் பிரிக்க வேண்டும் என்றும் அன்றைய மத்திய அரசின் உளவுத்துறை திட்டமிட்டு உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுவரை மத்திய அரசுக்கு எதிராக அவர் கடுமையாகப் பேசியதில்லை. தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் ‘களமாடுவதாக’ வெறும் வாயாடிக்கொண்டிருக்கும் சீமான் இங்கிருக்கும் திராவிடக் கட்சிகளையே குறிவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு உரிமைகளுக்காக யாரை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமோ அங்கே பம்மிக்கொண்டிருக்கிறார்.

Police Raj and Human Rights Violations in Tamil Nadu | SabrangIndia

காவிரி உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் கடுமையாகப் போராட்டம் நடந்தபோது தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். மே 17 இயக்கத்தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தமிழர் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தாக்கப்பட்டார். ஆனால், அப்போது சீமான் எங்கு பதுங்கியிருந்தார் என்பது இதுவரை ரகசியமாகவே இருக்கிறது.

திட்டமிட்டே காற்றுப் புகாத தனிசிறையில் திருமுருகன்காந்தி அடைப்பு-  வேல்முருகன் பாய்ச்சல் | Velmurugan says that Thirumurugan Gandhi is in the  worst prison - Tamil Oneindia

தற்போதைய மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் சீமான் உடனடியாகப் பதுங்கிக்கொள்வது ஏன் என்ற கேள்வி நெடுங்காலமாகவே இருக்கிறது. அப்போதெல்லாம் அவர் எங்கே ‘களமாடிக் கொண்டிருந்தார்’ என்பது அனைவருக்கும் புரிய புதிராக இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை மொத்தமாகக் குவித்து வைத்திருக்கும் மத்திய அரசை எதிர்த்து ‘களமாடாமல்’ மாநிலக் கட்சிகளை எதிர்த்து வாயாடிக் கொண்டிருப்பது ஏன் என்பதும் ரகசியமாகவே இருக்கிறது.

\

Tamil Nadu court grants bail to Vaiko in 2009 sedition case | National News  – India TV

2009 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அழைக்காமலே ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று பிரச்சாரம் செய்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாமல் இருந்ததா? இப்போது, சீமானுக்கு தனது சின்னஞ்சிறிய கட்சியை ஒழுங்காக நடத்தத் தெரியாததால் அவரது கட்சியில் இருக்கும் ஒரு சில தலைவர்களும் அதிமுகவில் சேர்ந்ததால் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் எம்.ஜி,ஆரைக்குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருக்கிறார்.

PMK urges Karnataka government to obtain stay on Jayalalithaa's acquittal -  The Economic Times

அந்தப் பிரச்சினையில் கேரள அரசின் சதி தமிழ்நாட்டில் விவரமுள்ள சில பத்திரிகையாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு அப்போது தெரியாது. தமிழ்நாட்டில் வேறு அரசியல் தலைவர்களும் அதையொரு பிரச்சினையாக எழுப்பவில்லை. அப்படிப்பார்த்தால் முல்லைப்பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டமே 1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ‘குளம் மேடு எதுவாக இருந்தாலும் அது இந்தியாவில்தானே இருக்கப்போகிறது” என்று மறைந்த முன்னாள் முதல்வர் பச்சைத் தமிழர் காமராஜ் விட்டுக்கொடுத்ததுதான் காரணம் என்று சீமான் கூறுவாரா? அன்று இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டிருந்தால் முல்லைப்பெரியாறு பிரச்சினையே வந்திருக்காதே.

HBD Kamarajar: சமூக வலைதளங்களில் 'ட்ரென்ட்' ஆன காமராஜர் பிறந்ததின விழா

முல்லைப்பெரியாறுப் பிரச்சினையில் சீமான் என்ன செய்துவிட்டார்? இதற்காக மக்களைத் திரட்டி பெரிய போராட்டம் நடத்தியவர் வைகோதான் என்பதை அவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அரசியல் எதிரிகள் கூட ஏற்றுக்கொள்வார்கள். இதற்காக நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதானே. எருமை சாக்கடையில் இறங்கி தனக்குத்தானே சேறுபூசிக்கொள்வதுபோல சீமான் தன்னைத்தானே அம்பலப்படுத்திக்கொள்கிறார் என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது.

Views: - 9

0

0