தலையை நீட்டினால் அவ்வளவு தான்… என் மீது வழக்கு வந்தாலும் பரவாயில்லை ; பாஜகவினருக்கு மிரட்டல் விடுத்த திமுக மேயர்..!!

Author: Babu Lakshmanan
8 November 2022, 1:44 pm
Quick Share

பாஜகவினர் கொடியை மட்டுமல்ல தலையை நீட்டினாலே துண்டிப்போம் என்பது போல நாகர்கோவில் மாநகராட்சி மேயர் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நான் மாவட்ட செயலாளராகவும் மேயராகவும் இருக்கும் இந்த மாவட்டத்தில் திமுக கட்சியை சார்ந்தவர்கள் நிகழ்ச்சியை நடத்தும்போது ஊறு விளைவிக்கவேண்டும் என்று நினைத்து பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டால் பிஜேபி கொடியை அல்ல. எதையாவது தலையை நீட்டினால் தலை துண்டாக்கபடும் என நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுகூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் கழுத்தில் கைவைத்து செய்கை காண்பித்து புரிந்துகொள்ளுங்கள் என ஆவேச பேச்சு .

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, முனைவர் பொன்னேரி சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் பேசுகையில், “எனது நான்காவது வார்டில் கிராமசபா கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கி வைக்க வருகையால் பார்வதிபுரம் பகுதியில் திமுக கொடிகளை திமுக கட்சி தொண்டர்கள் கட்டி வைத்திருந்தனர். ஆனால், திமுக கொடிகளின் இடையே பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் பிஜேபி கொடியை கொண்டு கட்டி வைத்திருந்தனர். அந்த கொடியை இரவோடு இரவாக நானும், திமுக கட்சி தொண்டர்களும் அப்புறப்படுத்தினோம். பிஜேபி கட்சியை சேர்ந்தவர்களே, அன்று உங்கள் தலைவர்கள் யாராவது வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் யாரும் வரவில்லை. வேண்டுமேன்றே பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் ஈடுபட முயன்றதால் அதை நாங்கள் அப்புறப்படுத்தினோம்.

நான் மாவட்ட செயலாளராகவும், மேயராகவும் இருக்கும் இந்த மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தும்போது, ஊறு விளைவிக்கவேண்டும் என்று நினைத்து உன் பிஜேபி கொடியை அல்ல, எதையாவது தலையை நீட்டினால் தலை துண்டாக்கப்படும் என கழுத்தில் கையை வைத்து செய்கையில் தலை துண்டாக்கப்படும் என கூறி அதை செய்வதற்க்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். புரிந்துகொள் என்மீது வழக்குவந்தாலும் பரவாயில்லை. அதை சந்திக்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். பாஜக இந்த மாவட்டத்தில் மதகலவரத்தை உருவாக்கி மாற்றத்தை கொண்டுவரலாம் என நினைத்தால் அது நடக்காது என இந்த நேரத்தில் பாஜக கட்சிக்கு சொல்லிக்கொள்கிறேன். எங்கள் மீது பாஜக கட்சியை சார்ந்தவர்களின் உங்கள் கைவிரல் நீட்டப்பட்டாலே கைவிரல் துண்டிக்கப்படும் என சொல்லிக்கொள்கிறேன் என ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 515

0

0