கேரள கொள்ளை சம்பவம்.. சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!
Author: Udayachandran RadhaKrishnan27 செப்டம்பர் 2024, 8:26 மணி
குமாரபாளையத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட ஆசர் அலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மூன்று ஏ.டி.எம் களை உடைத்துக் கொள்ளையடித்து தப்பிய வடமாநிலம் கொள்ளை கும்பலை தமிழ்நாடு போலீஸார் சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.
இதில் போலீஸார் தாக்கி விட்டு தப்ப முயன்ற இருவர் மீது நடத்திய சுப்பாக்கி சூட்டில் சுமைன் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஆசர் அலி என்பவர் காயமடைந்தார்.
மேலும் படிக்க: 5 ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி.. செந்தில் பாலாஜி ரிலீஸ்… கொண்டாடிய தொழிலதிபர்!!
இதில் காயமடைந்த ஆசர் அலிக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட ஆசர் அலிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0
0