இது நிச்சயமா, அவங்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் : எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்… பெருமை கொள்ளும் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
14 September 2022, 6:20 pm
Quick Share

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சத்தீஸ்கரில் வசிக்கும் பிரிஜியா சமுதாயத்தினரையும், ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் வசிக்கும் ஹட்டி சமுதாயத்தினரையும், தமிழகத்தில் மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தினரையும் எஸ்.டி., பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தத் தகவலை அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா மற்றும் அனுராக் சிங் தாகூர் ஆகியோர் வெளியிட்டனர்.

தமிழகத்தில் நரிக்குறவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், நரிக்குறவர் சமுதாயத்தினரை எஸ்.டி., பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது அச்சமுதாய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அவர்களுக்கும், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அவர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. தமிழக பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் நமது பாரத பிரதமர்.

இந்த மகத்தான முடிவு நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சம உரிமையையும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 317

0

0