தமிழகத்தில் பட்டாசு வெடிக்கத் தடையா..? தீர்ப்பை வெளியிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம்..!!

9 November 2020, 11:36 am
Crackers - Updatenews360
Quick Share

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம், கர்நாடகம் உள்பட 23 மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க தடை கோரிய வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை அறிவித்துள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை கோரி பல்வேறு மனுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களின் தலைமை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையல் அனைத்து மாநிலங்களும் எழுத்து பூர்வமான பதில்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு இன்று வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற பகுதிகளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் காற்று மோசமாக இருக்கும் நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்படும்.

Views: - 60

0

0

1 thought on “தமிழகத்தில் பட்டாசு வெடிக்கத் தடையா..? தீர்ப்பை வெளியிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம்..!!

Comments are closed.