நீட் தேர்வு விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு வெளியிட்டது..!

26 September 2020, 4:55 pm
jee_neet_exams_2020_updatenews360
Quick Share

அண்மையில் நடந்த நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய முகமை அமைப்பு வெளியிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப்.,13ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 14 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.

நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கடும் சவாலானதாக இருக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், 97 சதவீதம் கேள்விகள் மாநில பாடத்திட்டத்தின் கீழ்தான் கேட்கப்பட்டிருந்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 180 கேள்விகளுக்கான விடைகள் வெளியாகியுள்ளது. தேர்வை எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைகள் சரியானதாக உள்ளதா..? என்பது பரிசோதனை செய்து கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.