அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

Author: Babu Lakshmanan
16 September 2021, 2:25 pm
10th Student Suicide- Updatenews360
Quick Share

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நீட் தேர்வு முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை. தமிழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னதாக தேர்வு அச்சத்தினால் சேலத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி என அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தேர்வி எழுதிய மாணவி சவுந்தர்யா, தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கடந்த 4 நாட்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை உலுக்கியது.

அதேவேளையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும், தற்கொலை முடிவு சரியானதல்ல என்று அரசியல் தலைவர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ஊரப்பாக்கம் அய்யநேரி பகுதியைச் சேர்ந்த மாணவி அனுசியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் மாணவி அனுசியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Views: - 164

1

1