திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்… வழக்குகளை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
6 September 2021, 1:57 pm
Quick Share

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வு வரும் செப்.,12ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுத கடந்த ஜுலை 13ம் தேதி முதல் ஆக.,14ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த சூழலில், செப்.,12ம் தேதி பிற தேர்வுகளுக்கான தேர்வும் நடைபெற இருப்பதால், நீட் தேர்வை வேறு தேதியில் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஒரு சிலருக்காக 16 லட்சம் பேர் எழுதும் தேர்வை மாற்ற முடியாது எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Views: - 303

1

0