நீட் தேர்வில் தோல்வி… சென்னையைச் சேர்ந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Author: Babu Lakshmanan
8 September 2022, 9:21 am
Quick Share

சென்னை : நீட் தேர்வில் தோல்வியடைந்த சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்றிரவு வெளியானது. இதில், நாடு முழுவதும் 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் இருந்து 1,32,167 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 51.3% தேர்ச்சி பெற்றதன் மூலம் கடந்தாண்டை விட இந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் குறைவாகும்.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா (19), நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டுக்கொண்டார். மகளை மீட்ட பெற்றோர், கீழ்பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 389

0

0