நீட் தேர்வில் மதிப்பெண் குறைவால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை… இபிஎஸ் இரங்கல்…!!

Author: Babu Lakshmanan
6 November 2021, 2:43 pm
salem neet dead - updatenews360
Quick Share

சேலம் : நீட் தேர்வில் மதிப்பெண் குறைவால் சேலம் மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் – தலைவாசல் அருகேயுள்ள வடகுமரை ஊராட்சியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (20) அண்மையில் நடந்த நீட் தேர்வை எழுதினார். இதன் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், மதிப்பெண் குறைவாக பெற்றதால், கடந்த 2ம் தேதி களைக்கொல்லி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இது குறித்து தகவலறிந்த பெற்றோர் அவரை மீட்டு ஆத்தூ அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், மாணவன் சுபாஷ் சந்திர போஸ் இன்று காலை உயிரிழந்தார். இதன்மூலம், நீட் தேர்வால் இந்த ஆண்டில் உயிரிழந்த 4வது மாணவனாவார். இது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இரங்கல் செய்தி வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,”சேலம் மாவட்டம் வடகரை-யைச் சேர்ந்த 19 வயதே ஆன சுபாஷ் சந்திரபோஸ் நீட் தேர்வில், கடந்த ஆண்டு 158 மதிப்பெண்,இந்த ஆண்டு தேர்வில் 26I மதிப்பெண் பெற்றும் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காததால் மனமுடைந்து நவம்பர் 1ஆம் தேதி விஷம் அருந்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று 6.11.21 அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன். நான் மீண்டும் மீண்டும் மாணவ செல்வங்களை இதுபோன்ற தவறான முடிவை எடுக்காதீர்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

Views: - 519

0

0