நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு

Author: Udhayakumar Raman
12 March 2021, 11:24 pm
jee_neet_exams_updatenews360
Quick Share

டெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 11 மொழிகளில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கியதும், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 186

0

0