8 மாதங்களில் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வீர்கள்..? வழியைச் சொல்லுங்க இப்பவே செய்கிறோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்..!

15 September 2020, 3:44 pm
vijayabaskar - updatenews360
Quick Share

8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த தி.மு.க.வினர், அந்த வழிமுறைகளை கூறினால், நாங்களே அதனை செய்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அவர் பேசியதாவது :- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. தும்பை விட்டு விட்டது. தற்போது, உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படியே, அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள். எப்படி ரத்து செய்வீர்கள். அந்த வழியை சொல்லுங்கள், அதை இப்பவே செய்கிறோம், எனக் கூறினார்.

அப்போது, இடைமறித்து பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு எப்படி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதோ, அதுபோல் நீட் தேர்வு விவகாரத்திலும் செய்யலாம் என வலியுறுத்தினார்.

ஸ்டாலினின் இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதிலளித்ததாவது :- ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகம் சார்ந்தது. நீட் தேர்வு விவகாரம் நாடு முழுவதிலுமான பிரச்சனையாகும். அதேபால, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இருந்த வழி போல், நீட் தேர்வு விவகாரத்தில் இல்லை. ஊசி நுழைய இடம் கிடைத்தால் போதும், அதனை பயன்படுத்தி அ.தி.மு.க. அரசு விலக்கு பெற்று விடும், என்றார்.

Views: - 0

0

0