#மோடியாவது_மயிராவது, #ஈவேரா_எனும்_சாக்கடை : டுவிட்டரில் அடித்துக் கொள்ளும் நெட்டிசன்கள்..!

17 September 2020, 12:24 pm
modi - periyar - updatenews360
Quick Share

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வினால் தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விடுவோம் என பா.ஜ.க. நிர்வாகிகளும் கங்கனம் கட்டி வருகின்றனர். ஆனால், இது பெரியார் மண், தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என பெரியாரிஸ்டுகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எனவே, பெரியாரை விமர்சித்து பா.ஜ.க.வினரும், பா.ஜ.க.வை விமர்சித்து பெரியாரிஸ்டுகளும் மீம்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் தெரிவிக்க விட்டு வருவது வழக்கமான ஒன்றாகும்.

எதிரெதிர் கொள்கைகளை கொண்ட இந்த தருப்பினருக்கு பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், பெரியார் மற்றும் பா.ஜ.க.வின் தற்போதைய அடையாளமாக இருந்து வரும் பிரதமர் மோடிக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள் வருவதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இரு தலைவர்களின் பிறந்த நாளையொட்டி அவர்களின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரை இழிவுபடுத்தும் விதமாக கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் மாறி மாறி ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பெரியாரிஸ்டுகள் ‘#மோடியாவது_மயிராவது என்னும் ஹேஷ்டேக்கையும், பா.ஜ.க.வினர் #பெரியார்_எனும்_சாக்கடை என்ற ஹேஷ்டேக்கையும் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர். நெட்டிசன்களும் தங்களுக்கு விரும்பாத தலைவர்களை விமர்சித்த இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட பெரியார், பகுத்தறிவு பிரச்சாரத்துடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் மேற்கொண்டு வந்தார். அதோடு, சாதி,மத பேதம் ஒழிய பாடுபட்டவர். அதேபோல, மோடியும் நம் நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர். அவரை இழிவுபடுத்துவது நாட்டையே இழிவுபடுத்துவதற்கு சமம் என்பதை அறியாமல் இதுபோன்ற ஹேஷ்டேக்குகளால் கேவலமாக இழிவுடுத்துவது இருபெரும் தலைவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், அவரவர் தலைவர்களின் கொள்கைகளையும், பெருமைகளையும் மட்டுமே மக்களிடம் இன்றைய தினத்திற்கு கொண்டு சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாய் செயல்பட வேண்டும். மாறாக இப்படி இழிவுபடுத்துவது வீண் பகையை உருவாக்கும் செயல்களாகத்தான் அமையும்.

Views: - 4

0

0