கிருஷ்ணகிரியில் புதிய தோட்டக்கலை கல்லூரி… வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.573 கோடி ஒதுக்கீடு

Author: Babu Lakshmanan
14 August 2021, 12:00 pm
MRK panneerselvam - updatenews360
Quick Share

தமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே வேளாண்மைக்கு என தனிபட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அவர் வெளியிட்ட உரையில் கூறியிருப்பதாவது :-

நீலகிரியில் ரூ.2 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை வளாகம்

30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம்

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகே சேமிப்பு வசதியுடன் விற்பனை நிலையம் அமைக்க ரூ.10 கோடி

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.50 லட்சம் செலவில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம்

உணவுப்பதப்படுத்துதலுக்கு என தனி அமைப்பு நடப்பாண்டே தொடங்கப்படும்

மீனுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என தொழில் கற்கும் மையங்கள் அமைப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.573 கோடி ஒதுக்கீடு

உணவுப்பதப்படுத்துதலுக்கு என தனி அமைப்பு நடப்பாண்டே தொடங்கப்படும்

கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 100 ஏக்கரில் ரூ.2 கோடியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்

மேலும் ஒரு தோட்டக்கலை கல்லூரி

கிருஷ்ணகிரி ஜுனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் தோட்டக்கலை கல்லூரி உருவாக்கப்படும்

மீனுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என தொழில் கற்கும் மையங்கள் அமைப்பு

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு

திருச்சி – நாகை மாவட்டங்களுக்கு இடையிலான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிப்பு

அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் – ரூ. 58.85 கோடி ஒதுக்கீடு

மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்(சென்னை) – ரூ.2 கோடி

வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9,607 கோடி கடன் வழங்க திட்டம்

நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்த, ஏலக்கூடம் வலுப்படுத்த ரூ.4.09 கோடி ஒதுக்கீடு

பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.30 கோடி

Views: - 454

0

0