போயஸ் கார்டனில் சசிகலாவிற்கு தயாராகும் சொகுசு பங்களா..!! இவ்வளவு பெருசா..?

20 January 2021, 12:24 pm
Sasikala-in-jail-updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் சசிகலாவிற்கு, சென்னை போயஸ் கார்டனில் சொகுசு பங்களா தயாராகி வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27ம் தேதி பெங்களூரூ சிறையில் இருந்து விடுதலையாகிறார். அவரது விடுதலை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சசிகலா வாழ்ந்து வந்த இல்லம், அரசு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த வீட்டை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், சசிகலா அந்த வீட்டில் குடிபுக முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரில் உள்ள இடத்தில் சசிகலாவுக்காக புதிய பங்களாவை கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன.

வருமான வரித்துறையினரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தாலும், கட்டுமானப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. 13 கிரவுண்ட் கொண்ட இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் சசிகலாவுக்காக பங்களா கட்டப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலா தங்குவதற்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேவேளையில், தி.நகரில் உறவினரான கிருஷ்ணப்ரியா வீடு அருகே சசிகலா தங்குவதற்கு தனி வீடு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0