கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர் என தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா..? என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடத்தப்படுகின்றது.
சென்னை, கொச்சின் ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.