தப்பியது நிதிஷ்குமார் அரசு… காங்கிரஸ் ஆதரவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 6:04 pm
Quick Share

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு, பெரும்பான்மை எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்றது.

பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்தார். பின்னர், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், புதிய அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது. மொத்தம் 243 எம்எல்ஏ.,க்களை கொண்ட பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், 160க்கும் மேற்பட்டோர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளித்தனர்.

இதன் மூலம், ஏறக்குறைய வெற்றி உறுதியானது. இதனிடையே, சபாநாயகரான பா.ஜ.க,வின் விஜயகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி முன்னிலையில் நடந்த ஓட்டெடுப்பு நடந்தது.

இதைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், என தெரிவித்தார்.

Views: - 455

0

0