4வது முறையாக முதலமைச்சர் அரியணையை அலங்கரித்தார் நிதிஷ்குமார்!! 14 அமைச்சர்களும் பதவியேற்பு

16 November 2020, 5:32 pm
nithis kumar sworn - updatenews360
Quick Share

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 4வது முறையாக முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார்.

அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் கடந்த 10ம் தேதி எண்ணப்பட்டது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக 74 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளையும் கைப்பற்றின. நிதிஷ்குமார் கட்சியை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதால், நிதிஷ்குமாருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிடைக்குமா..? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூடடத்தில், பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை முதலமைச்சராக சுஷில் குமார் மோடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4வது முறையாக நிதிஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சர்களாக தர்கிஷோ பிரசாத், ரேணு தேவி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் 14 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 22

0

0