நித்யானந்தா நீர்த்துப் போன கதை!!

Author: Udayachandran
8 October 2020, 9:30 pm
Nithayananda- Updatenews360
Quick Share

“நித்யானந்தா” உலகமே கொண்டாடிய ஒற்றை நபர் –
ஊரே இகழ்ந்த ஆபாச நபர் –
தென்னகம் முழுவதும் அறிந்த நபர் –
திருவண்ணாமலையில் உதித்த நபர் !

அவ்வளவு ஏற்றம் – ஆன்மீக புருஷனாய்
அவதாரத் தோற்றம் – அத்துணை உயரம் –
ஆனந்த வாழ்வால் அடைந்தது துயரம்!

பணம் – பணம் – பணம் – லட்ச லட்சமாய் , கோடிகோடியாய் – பொன்னும் மணியுமாய் – மின்னும் வைரமாய் – “குபேர புரியே குறைவுபட்டதோ” என்று எண்ணும்படியான குதூகல – கும்மாள – கோலாகல வாழ்க்கை!

Nithyananda ashram controversy: Trouble mounts for godman - The Week

செல்வாக்கோ – சிகரம் தொட்டது. நின்றால் உரை வீச்சு –
நிமிர்ந்தால் உபதேசம் – அமரந்தால் ஆன்மீகம் –
நடந்தால் ஊர்கோலம் – பக்தர்கள் எத்தனை வகை வகையான பக்தர்கள்!

பற்றறுத்த பக்தர்கள்! பரவச பக்தர்கள் –
படுக்கையாய்ப் படுத்து குணமான பக்தர்கள்!
படையெடுத்து வந்த பக்தர் கூட்டம் கண்டு
பாரே அதிசயித்தது. பகட்டும், பந்தாவும் பந்தி விரித்தன – பக்தி அங்கே பரிதாப நிலை அடைந்தது.

Nithyananda Diary 13th January 2015 | Swamiji's Jayanthi | Ati Rudra Mahayaga Day-3 | Jayanthi Brahmotsava Day 10| Cultural Activities | Paduka Puja| Nithya Kirthan | Satsang | Nithyananda Sangha's Official Web

ஒரு சுபயோக சுபதினத்தில் சன் டிவியில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ அத்துணை ஆட்டங்களையும் சந்தி சிரிக்க வைத்தது. சபைக்கு வந்த சல்லாபக் காட்சிகள் நித்யானந்தாவின் சன்மார்க்க வேடத்தை சரித்து விட்டன.

சீண்டுவாரின்றி சிதைந்து போனது – “சித்தர்”பிரானின் சிவயோகக் கோலம். எப்படி நிகழ்ந்தது? எவ்வாறு சரிந்தது? எங்ஙனம் சாத்தியப் பட்டது. அதுவும் வெறும் நாற்பத்திரெண்டு வயதுக்குள்ளாகவே –
அரச போகத்தையும் – அவமானத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக அடைந்த உலக விசித்திரம் அவரின் கதை.

இது தெரிய வேண்டுமானால் – பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
வரலாற்றின் வண்டல்களை வடிகட்டிப் பார்த்தால் – அதற்குள்ளே ஒரு வசீகரக் கதையொன்று இருப்பது தெரியவரும்.

நீங்கள் அனைவரும் நினைப்பது போல் -நித்யானந்தா கொடியவரில்லை – குயுக்திக் காரர் இல்லை.
கொள்ளையடிக்கவும், கொண்டாட்டம் போடவும் – உஷார் திட்டம் போட்டு உலா வந்தவரில்லை.

ஆரம்பத்தில் அவர் நல்லவர் – மிகவும் நல்லவர்! திசையெல்லாம் ஒளிவீசும் திருஅண்ணாமலைக் காரர்.

திருஅண்ணாமலை ! இது
நகரம் மட்டுமில்லை –
நடமாடும் நமசிவாயம்!
ஊராய் அமைந்த உள்ளார்ந்த ஆன்மீகம்!
மலையாய் அமர்ந்த மகாதேவ மகத்துவம்!

While we were laughing at his videos, how Nithyananda's dangerous cult kept growing | The News Minute

அங்கே – பக்தி நெறி தவழ – பண்பாட்டு நெறி மலர – எளிய வாழ்வு வாழ்ந்து வந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் நம் நாயகன் நித்யானந்தா! அருணாசல முதலியார், லோக நாயகி தம்பதியின் அரும் புதல்வர். நித்யானந்தாவின் தாத்தா வக்கீல் குமாஸ்தாவாக எளிய பணி புரிந்தவர்.

நடுத்தரக் குடும்பம் – எனினும்
நாள்தோறும் நமசிவாய பூசனை –
திருநீறிட்டு தெய்வீக நாமம் சொல்லி
தினமும் வழிபடும் திவ்வியக் குடும்பம்!

அந்த நல்ல குடும்பத்தில் சிறுமலராய் நித்யானந்தா பூத்த போது – அவரது பெயர் ராஜசேகரன். இவரும் சிறுவயதிலிருந்தே சிவநாமம் சொல்லி சிந்தை குளிர்ந்தவர்தான்.திருஅண்ணாமலை நகரிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் படித்த சாதாரண மாணவர்தான். படிப்புத் திறமை சுமார்தான். ஆனால் பக்திச் செழுமை மிக அதிகம்.

About Swamiji

விடாது சிவபூஜை – விலகாத பக்திநெறி
விடுமுறை நாட்களில் ஆலயத்தில் உழவாரப்பணி – இப்படி பரமேஸ்வர மயமாகப் பயணித்தவர்தான் நம் ராஜசேகரன்.

ஆலய உழவாரப்பணியில் அவர் அர்ப்பணிப்பு உணர்வோடு ஒன்றிச் செய்ததை இன்றும் கூட திருஅண்ணாமலை நகரவாசிகள் பசுமையாக நினைவில் இருத்தியுள்ளார்கள்.

படிப்பில் ராஜசேகரனுக்குக் கவனமோ நாட்டமோ இல்லாததைக் கண்ட அவர் தந்தை பெரிதும் வருந்தினார். மகனைப் பெரிதாகப் படிக்க வைத்து உயர் அதிகாரியாக உலா வர வைக்க வேண்டுமென்பது அவரது கனவு. ஆனால் ராஜசேகரன் அதை சட்டை செய்யாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் தந்தை. இம்மாதிரியான சூழலில் இருந்து விடுபட இமயமலை நோக்கி ஓடினார் நித்யானந்தா.

Sri Paramahamsa Nithyananda | Hindu dharma, Hindu, Himalayas

பல காலம் அங்கே இருந்த அவர் – யாரைச் சந்தித்தார் – யாரிடம் பயிற்சி பெற்றார் – யாரிடம் ஆசி பெற்றார் – இவையெல்லாமே மர்மங்கள்தாம்.

ஆனால், அங்கிருந்து திரும்பி வந்தவுடனேயே தன் பெயரை “நித்யானந்தா” ஆக்கிக் கொண்டார். நாலு வார்த்தை பேசுவதற்கே நடுங்கிக் கொண்டிருந்த ராஜசேகரன் – இப்போது அருவிச் சுரப்பு போல அழகாகச் சொற்பொழிவாற்றினார். தலை மீது கை வைத்து – எப்பேர்ப்பட்ட வியாதியையும் பிரார்த்தனை மூலமே குணப்படுத்தும் வல்லமையையும் கூடுதல் சிறப்பாகப் பெற்றிருந்தார்.

Kailaasa: All you need to know about Nithyananda's own 'Hindu nation' Kailaasa | India News - Times of India

நிஜமாகவே ராஜசேகர் “நித்யானந்தா” ஆகிவிட்டார். அவரது சொல்லழகும், சிரிப்பழகும், முகப் பொலிவும் காண்போரைப் பிரமிக்க வைத்தன. ஒரேயொரு வேளைதான் உணவு – அதுவும் மிக எளிய உணவு.

நோயாளியின் மீது “சாமி” கை வைத்து கண்மூடிப் பிரார்த்தித்தால் உடம்பிலுள்ள வியாதி ஓடிப் போய் விடுகிறதாமே….

பத்தொன்பது வயசுதான் ஆகுதாம் – அந்தப் பையன் கிட்ட அவ்ளோ பவர்…….. இப்படி அரசல் புரசலாக ஊரிலுள்ள எளிய மக்கள் பேசிக் கொண்டனர்.

திருஅண்ணாமலை பவழக் குன்றில் தவம் –
நோயாளிகளைக் குணப்படுத்துதல் – ஒரேயொரு முறை மிக எளிய உணவு…. நித்யானந்தாவின் ஆரம்ப கால ஆன்மீக வாழ்வு இப்படித்தான் அரும்பத் தொடங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக வெளியூரிலிருந்து கூட நோயாளிகள் வர ஆரம்பித்தனர் – கூட்டத்தில் சொற்பொழிவாற்ற அழைக்க ஆரம்பித்தனர். பெங்களூரிலும் சேலத்திலும் உள்ள சில பணக்கார நோயாளிகள் இவரால் பலன் அடைந்தனர் ‌.

Fugitive godman Nithyananda sets up own 'Hindu sovereign nation'

ஒரு ரூபாய் ஃபீஸ் கொடுத்த நோயாளிகள் – இவருக்கு நூறு ரூபாய் தர ஆரம்பித்தனர். வாழ்த்த ஆரம்பித்தனர் – வரவேற்க ஆரம்பித்தனர். அப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை – ஏனென்றால் அவரது ஒரு வேளை எளிய உணவு சாப்பாட்டுப் பழக்கம் மாறவில்லை.

Nithyananda Diary 18th December 2016 | Nithyananda Peetham, Bengaluru Aadheenam | Sadashivoham Day 18 | Nithyananda Yoga with The Avatar! | Manifesting Shaktis | Nithyananda Sangha's Official Web Site | Health, Wealth, Relationships, Excellence ...

புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்களால் “இன்னும் ஒரு வாரம்தான் உயிரோடிருப்பார்” என்று நாள் குறிப்பிடப் பட்ட செல்வந்த நோயாளி ஒருவரை சொற்பொழிவு ஆற்றப் போன இடத்தில் சந்தித்தார் நித்யானந்தா.

அந்த நோயாளி கைகூப்பி நமஸ்கரித்த போது – நித்யானந்தா “நீடூழி வாழ்க” என்று ஆசீர்வதித்தார். “நான் எங்கே சாமி நீடூழி வாழறது? இன்னும் ஒரு வாரம்தான் என் வாழ்வு. ரெண்டு கிட்னியும் போயிடுச்சு – இதயம் தாறுமாறா ஓடுது” என்று அந்த பணக்கார நோயாளி அலுத்துக் கொண்டார்.

நித்யானந்தா அவரைக் கட்டிப் பிடித்துத் தேற்றி “இன்னும் இரண்டு நாட்களில் உங்களைக் குணப்படுத்துகிறேன்” என்றவர் , சொல்லியபடியே இரண்டே தினங்களில் அந்த நோயாளியை முழுமையாகக் குணப் படுத்தி விட்டார். உடனே அந்த நோயாளி தன் சொத்தின் ஒரு பகுதியையே நித்யானந்தாவுக்குத் தந்தார்.

இதைக் கேள்விப்பட்ட பணம் பெருத்த நோயாளிகள் – படையெடுத்தார்கள் நித்யானந்தாவை நோக்கி.

Swami Nithyananda honour sparks row at Mahakumbh | Daily Mail Online

நம் உடம்பில் ஏழு சக்கரங்கள் உண்டு. நம்மை இயக்குவதே அந்தச் சக்கரங்கள்தாம். அதில் எந்தச் சக்கரமாவது பழுதுபட்டால் அந்தச் சக்கரம் தொடர்புடைய உறுப்பு சரிவர இயங்காமல் நோய்வாய்ப்படும்.

நித்யானந்தா அந்த பழுதுபட்ட சக்கரத்தை அறிந்து அதை சரியாக இயங்கச் செய்தவுடன் அந்த உறுப்பு சரியாகி நோயாளி ஆரோக்கியமடைவார். இதுதான் நித்யானந்தாவின் சிகிச்சை முறை. இதைத்தான் அவர் இமயமலையிலிருந்த யாரோ ஒரு சித்தரிடமிருந்து கற்று வந்தார்.

Nithyananda moves on to his own 'Hindu nation' Kailaasa but memories of his dark past haunt

இதுதான் – கவனிப்பார் இல்லாமலிருந்த ராஜசேகரனை – கண்டோர் அனைவரும் மதிக்கும்படியான நித்யானந்தா ஆக்கியது.

பக்தர் கூட்டம் பெருகியது – பணக்காரக் கூட்டமும் பெருகியது – செல்வம் கொட்டியது. அப்போதும் கூட அவர் கெட்டுப் போகவில்லை – ஏனெனில் அந்த ஒற்றை வேளை எளிய உணவுப் பழக்கம் அப்படியே இருந்ததுதான்.

ஊரெல்லாம் சிஷ்யர்கள் – உலகமெல்லாம் ஆசிரமக் கிளைகள் – வரவேற்க செல்வந்தர்கள் – வணங்கிய தலைகள் – வளைந்த இடுப்புகள் – கூப்பிய கைகள் – சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய சரித்திரப் பிரசித்தி பெற்ற சங்கநாதப் பொக்கிஷக் காரர்கள் – அரவணைத்த அரசியல்வாதிகள் – ஆட்சித் தலைவர்கள் – புகழ் – புகழ் – புகழ் – எங்கு நோக்கினும் நித்யானந்தாவின் புகழ்க் கொடி.

அப்போதுதான் நண்பர்களே – அந்த அநியாயம் நடந்தது. ஆம்! உணவுப் பழக்கம் உருமாறத் தொடங்கியது – ஒரு வேளை உணவு பல வேளை உணவாகப் பரிமாணம் எடுத்தது – அந்த எளிய உணவு அகன்று போனது – ஆடம்பர உணவு ஆட்சிக்கு வந்தது.

Nithyananda Peetham, Bengaluru Adheenam Instagram posts - Gramho.com

இருபத்து இரண்டே வயது – பருக்கைச் சோறு கூட இல்லாமல்
பட்டினி கிடப்பவனையே படாத பாடு படுத்தும்
பருவ வயது.

மூச்சு விடத் திணறுபவனையே மோகம் கொண்டு ஆட்டுவிக்கும் மூர்க்க வயது. உடல் அசைவில்லாமல் ஒடுங்கிக் கிடப்பவனையே உலுக்கி எடுக்கும் கொக்கோக வயது.

அப்போதுதான் நம் நாயகன் நித்யானந்தா – எளிய உணவுப் பழக்கத்தை ஏறக் கட்டிவிட்டு – சுகபோக உணவுகளை சுவைக்கத் தொடங்கினார்.

Maheshwara Puja Maheshwara Puja is... - KAILASA's HDH Nithyananda Paramashivam | Facebook

அந்த சுகபோக உணவு – நித்யானந்தாவின் சொர்க்க உணர்வுகளை சுண்டி இழுக்கத் தொடங்கியது. நரம்புகள் நர்த்தனமாடத் தொடங்கின – கண்கள் – கவர்ச்சியை விரும்பின – நாசி – நறுமணத்தைத் தேடியது. உடம்போ – வேறொரு தொடுதலுக்காய் வேண்டி நின்றது.

இப்போதுதான் நம் நித்யானந்தா ஜீவன் முக்தர் ஆகக் கொண்டாடப் படுகிறாரே! அதனால் பெண்கள் பயமின்றி “சுவாமிகளின்” அருகில் வந்து பழகினார்கள். வழிபாட்டு உணர்வோடு வளைய வந்தார்கள்.

நித்யானந்தாவின் உள்ளத்தில் நெருப்பாய் தகித்த வயதுக் கோளாறு – வழி தவறச் செய்தது – சுழி மாறச் செய்தது – பக்தையர் பதறினார் – “பகவானின் அநுக்கிரகம்” என்று அதற்கு பரிசுத்தப் பெயர் சூட்டப்பட்டது.

எப்போதுமே – கள்ளத்தனம் செய்பவர்களுக்குக் கர்வம் கூடாது –
அசிங்கச் செயல்புரிபவர்க்கு ஆணவம் கூடாது. ஆனால், இந்த அடிப்படை அறத்தைக் கூட நம் ஆனந்த நாயகன் அறியவே இல்லை.

ஒரு மாபெரும் அரசியல்வாதி அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் சகல செல்வாக்கையும் பெற்றிருந்தார். அவர் நித்யானந்தாவின் பெரிய சொத்து ஒன்றை அடிமாட்டு விலைக்குக் கேட்டார். அதனால் கோபமடைந்த நித்யானந்தா “தர முடியாது” என்று சொல்லி விட்டார்.

அப்போது அந்த அரசியல்வாதி “எங்களின் பவர் உங்களுக்கு தெரியாது” என்று மிரட்ட – ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நித்யானந்தா – “என் பவர் உனக்குத் தெரியாது” என்று கத்தி அந்த நபரை அனுப்பி விட்டார்.

அந்த அரசியல்வாதி நித்யானந்தா ஆசிரமத்தில் அதிகாரத்தோடு இருந்த லெனின் கருப்பன் எனும் நபரைப் பிடித்து – ரகசிய கேமரா உபகரணங்களைக் கொடுத்து – நித்யானந்தாவின் நிலாக்கால நிகழ்வுகளை படம் எடுக்கச் சொல்லி விட்டார். படங்கள் எடுக்கப் பட்டன – படங்கள் தொலைக்காட்சியில் பவனி வந்தன. படங்கள் பார்வையாளர்களைப் பதைக்க வைத்தன.

தொழுகை நடத்தும் ஆசிரமத்தில் தோழியின் தொடுகையை – தொலைக்காட்சி தொலைக்காமல் காட்டியது.

Is Former Actress Ranjitha a Full-time Sannyasin Now? | Astro Ulagam

அடா அடா அடா அடா! அப்போதே சரிந்தது அனுக்கிரக சாம்ராஜ்யம்! புதிய புகார்கள் புற்றீசலாகக் கிளம்பின.
இது அந்த அரசியல்வாதியின் ஆக்க பூர்வ வேலை என்று அறிந்து கொண்ட நித்யானந்தா – அந்த அரசியல்வாதியின் அதிகாரத்தைக் குறைக்க சத்ரு சம்ஹார யாகம் செய்தார். அந்த அரசியல்வாதியின் பதவி அம்பேல்.

ஒன்றும் தெரியாத உழவாரப்பணி ஊழியனாய் ஒரு காலம் –
இமயமலை சென்று திரும்பி சக்திகளைப் பெற்ற சந்நியாசியாக ஒரு காலம் – படை, பலம், பவர், பணம் ஆகியவற்றோடு
பவனி வந்தது ஒரு காலம் –

கடைசியில் – போற்றிட்ட பக்தர்களால் புறக்கணிக்கப் பட்டு – பொய்யாக ஒரு நாட்டை பூடகமாய் காட்டி – கைலாசப் பெயர் வைத்து கலங்கி நிற்கும் காலம் இது!

Where is Nithyananda? Ecuador government denies giving asylum, 'Kailasa' island to godman

இதுதான் – நித்யானந்தாவின் நிகழ்ந்த வரலாறு – உலகிற்கு அளித்த உன்னதச் செய்தி! நல்ல குடும்பத்தில் பிறந்து – நல்ல ஊரில் வளர்ந்து – நல்ல திறமையை அடைந்த ஒருவர் – பணத்தினாலும், பருவ மோகத்தினாலும் பாழாய்ப் போன கதைதான் அவருடையது.

Arrest Nithyananda, Centre tells Karnataka government - News Today | First with the news

கட்டுப்பாட்டைக் கடைபிடித்திருந்தால் – கடவுளின் பக்தனாகக் கண்ணியம் பெற வேண்டியவர் – வரம்பு மீறியதால் வசவுக்கு ஆளானார். இவர் வாழ்வு இளந்துறவிகளுக்கு ஒரு பாடம்!

Views: - 816

5

1