ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும்: கைலாசா அதிபர் நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு.!

6 September 2020, 9:51 pm
Quick Share

கைலாசா: கைலாசா நாட்டில் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். நாட்டில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இது குறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை.

ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தா வெளியிட்டார். இதையடுத்து ஹோட்டல் கட்ட அனுமதியளித்தார் .மேலும் அந்த கைலாசா நாட்டில் தன்னுடைய ஊரை சேர்ந்த திருவண்ணாமலை மற்றும் மதுரை மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் கைலாசா நாட்டில் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த பாராளுமன்றத்தை நிறுவ 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறியவர் வரும் ஜனவரிக்குள் இதை செய்து முடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார். சித் சபை, ராஜ சபை, தேவ சபை, கனக சபை மற்றும் நித்யானந்தா சபை என இந்த பாராளுமன்றத்தில் ஐந்து சபைகள் இருக்குமென்று கூறியுள்ளார். வேதங்களிலும் ஆகமங்களிலும் பரமசிவன் எடுத்துரைத்த தத்துவங்களுக்கு இணங்க இந்த ஐந்து சபைகளும் இயங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Views: - 6

0

0