நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

25 November 2020, 1:44 pm
Quick Share

சென்னை : நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்றும், நிவர் புயல் இன்று நள்ளிரவு – நாளை அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கூறியிருப்பதாவது :- நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளதநிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 240 கி.மீட்டரிலும், புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ., தொலைவிலும் உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 155 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். நாகை, கரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்

புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு கடற்கரை பகுதிகளிலும் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் கடலோர பகுதிகளில் 80 முதல் 90 மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும். சென்னையில் சில இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 16 செமீ. மழைப்பதிவாகி உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0