1 மணி நேரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கும் நிவர் புயல்

25 November 2020, 10:18 pm
Quick Share

டெல்லி: இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நிவர் புயல் புதுச்சேரியை கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுச்சேரியில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடலூரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில்புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது120 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும். கஜா புயலின் போதுவீசிய காற்றை விட 10 கி.மீ அளவிற்கு குறைவாகவே இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Views: - 27

0

0