நிலப்பரப்பில் அசுர பலத்தை காட்ட முயலும் நிவர் : அடுத்த 6 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!!
26 November 2020, 1:10 pmசென்னை : நிலப்பரப்பில் நகர்ந்து வரும் நிவர், அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. ஆரம்பத்தில் அதி தீவிர புயலாக கரையைக் கடந்த புயல், பிறகு படிப்படியாக தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆனால், பெரிதாக எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
தற்போது நிலப்பரப்பில் வடமேற்கு திசையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை பகுதிகளில் நகர்ந்து வரும் நிவர், படிப்படியாக வலுவிழந்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து 85 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 95 கி.மீ. தொலைவிலும் நிவர் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், வடமாவட்டங்களில் சூறைக்காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறி, அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0
0