முழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…!!

26 November 2020, 5:03 am
nivar over - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரிக்கு அருகே தீவிரப் புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை நிவர் புயல் கரையை கடந்தது.

தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் கரையை கடந்தது. நேற்று இரவு 11.30 மணியளவில் மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றோடு புதுச்சேரிக்கு கரை கடக்க துவங்கியது.

மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் நிவர் புயலால் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரை கடந்த போது விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இந்நிலையில் புயல் முழுவதும் கரை கடக்க தாமதமாகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து அதிதீவிர நிலையிலிருந்து தீவிரப்புயலாக மாறியதாக சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன்அறிவித்தார். இதனையடுத்து 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழந்து நிலப்பகுதிக்கு செல்லும். வட தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என மேலும் அறிவித்தார்.

மழை புயல் சேத நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்துவருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்த விவரங்கள் அறிய குழுக்கள் அமைக்கப்பட்டு முதலமைச்சர் பின்னர் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Views: - 0

0

0