தமிழர்களிடம் நிலம் வாங்கி.. வடமாநிலத்தவர்களுக்கு வேலையா? என்எல்சி செய்யறது அநீதி : சீறும் அன்புமணி ராமதாஸ்!!

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த தமிழர்களுக்கு வேலை இல்லை. நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை என்பது அநீதி என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 862 பேருக்கு கடந்த 1990 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக என்.எல்.சி நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால், 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் வேலை பெற்ற 28 பேர் வட இந்தியர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்குமோ? என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.

வட இந்தியர்களுக்கான வேலை நேரடியாக வழங்கப்படவில்லை. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைப்பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் வட இந்தியர்களுக்கு சொந்தமான நிலங்களே இல்லை எனும் போது, வட இந்தியர்கள் எவ்வாறு நிலம் வழங்கியிருக்க முடியும்? அவர்கள் நிலமே வழங்காத நிலையில் அவர்களுக்கு எவ்வாறு வேலை வழங்கப்பட்டது? வட இந்தியர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மையை தெரிந்து கொள்வதற்காக, கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்தெந்த நாட்களில் பரிந்துரை பட்டியல் வழங்கப்பட்டது? அது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல் ஆகியவற்றை வழங்கும்படி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் பதிலளிக்கவில்லை. அது குறித்த தகவல்கள் குப்புசாமி கோரிய வடிவத்தில் தங்களிடம் இல்லை என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியுள்ளது. இல்லாத தகவல்களின் அடிப்படையில் என்.எல்.சி எவ்வாறு நிரந்தர வேலை வழங்கியது? என்.எல்.சி நிறுவனத்திற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன.
அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த 12.12.2022-ஆம் நாள் நான் எழுப்பிய வினாவிற்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விடையளித்திருந்தார். அப்போது மத்திய அரசிடம் இல்லாத செய்திகளை என்.எல்.சி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது எப்படி? இது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்திற்கு என்.எல்.சி மறைத்ததா? என்பது குறித்து விடையளிக்கப்பட வேண்டும்.

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

36 minutes ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

56 minutes ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

2 hours ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

2 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

3 hours ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

4 hours ago

This website uses cookies.