நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லை : நீதிபதியின் கோரிக்கைக்கு நீதிமன்றம் மறுப்பு!!

18 September 2020, 12:55 pm
Quick Share

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு மீதான அச்சத்தினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டார்.

அதில், ‘உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது,’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதேவேளையில், சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி பல்வேறு நீதிபதிகளும் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Views: - 9

0

0