வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 12ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..!

Author: Babu
10 October 2020, 2:07 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 12ம் தேதி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக வரும் 12ம் தேதி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மழைநீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பகுதிகளில் தடையின்றி மழைநீர் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் பெய்யும் முதல் பருவமழை என்பதால், தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Views: - 71

0

0