வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் குளிர் : மிகை மிஞ்சிய பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

1 February 2021, 10:28 am
delhi mist - updatenews360
Quick Share

டெல்லி : தலைநகர் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட தலைநகரங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் குளிர்காலம் நிலவி வரும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காலையில் வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக பதிவாகி வருகிறது. உ.பி., பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் வடமேற்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பீகாரில் உள்ள முசாபர்பூர் நகரில் அடர்பனி போர்வை போன்று பனி மூடி இருப்பதாகவும், பீகாரில் வெப்பநிலை காலையில் 9.91 டிகிரியாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான பனிப்பொழிவால் பொதுமக்கள் சாலைகளில் செல்லும்பொழுது, தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர். இருப்பினும், இந்தப் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் எதிரே வரும் அல்லது செல்லும் வாகனங்கள் தெரியாமல் ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தப் பனிப்பொழிவால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 30

0

0