சோதனை காலத்தில் அரசின் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் : பொதுமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தல்..!

Author: Babu
12 October 2020, 12:21 pm
EPS discuss - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மழைநீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பகுதிகளில் தடையின்றி மழைநீர் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- வடகிழக்கு பருவமழையினால் கடந்த ஆண்டு பாதித்த பகுதிகளில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய துறைகளின் மூலம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும்.

இதுபோன்ற சோதனை காலங்களில் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். புயல் வீசும் போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற தேவையான உபகரணங்கள் தயாராக உள்ளன.
வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் காலத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மீட்புப் படையினர் தயாராக உள்ளனர். பாதுகாப்பு கருதி மீனவர்களுக்கு தகவல் தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன, எனக் கூறினார்.

Views: - 35

0

0