அமித்ஷா மட்டுமல்ல பாஜகவில் யாராக இருந்தாலும் வாங்க.. சனாதனம் குறித்து விவாதிக்க தயார் : ஆ.ராசா சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan6 செப்டம்பர் 2023, 2:42 மணி
அமித்ஷா மட்டுமல்ல பாஜகவில் யாராக இருந்தாலும் வாங்க.. சனாதனம் குறித்து விவாதிக்க தயார் : ஆ.ராசா சவால்!!
கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதலமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனை பிரதமர், குடியரசுத் தலைவர்களை உருவாக்கியுள்ளார்.
அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.
சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன்.
அமித்ஷா, பா.ஜ.க.வில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள் டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க. சார்பில் நானும் பேசுகிறேன்.
நாங்கள் சனாதனம் வேண்டாம் என்று போராடியதால் தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆனார்கள்.
மோடியை விட அமித்ஷாவை விட பா.ஜ.க.வில் உள்ள அனைத்து அமைச்சர்களை விட, ஆர்.எஸ்.எஸ்.-ல் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வருகை தந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என்று கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ஆனால் மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்துச் சென்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.
இதனை நியாயப்படுத்தும் அங்குள்ள முதலமைச்சரை நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எரிவதற்கு நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும் என அவர் பேசினார்.
0
0