மெட்ரோ ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்: பயண அட்டை செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு..!!

Author: Aarthi Sivakumar
29 June 2021, 10:37 am
chennai metro - updatenews360
Quick Share

சென்னை: மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையை 50 சதவீத பயணிகளுடன் தொடங்க கடந்த 21 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயண அட்டை உபயோகிக்கும் பயணிகளுக்காக கொரோனாவால் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு காலமான மே 10ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக்கொள்ள அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகலாம். முறையே கொரோனா ஊரடங்கு காலத்தில் கியூ.ஆர். குறியீடு பயண சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் இன்று முதல் நீட்டித்து தரப்படுகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முக கவசம் அணியாவிட்டாலோ அல்லது முக கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. அனைத்து பயணிகளும் முக கவசத்தை சரியாக அணிந்துள்ளனரா? என்பதை கண்காணிக்க குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கடந்த 21ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் முக கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 19 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டுள்ளது.

Views: - 195

0

0