எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணை தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பெற்றுக்கொள்ளலாம்….!!

17 November 2020, 9:52 am
exam board - updatenews360
Quick Share

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 , பிளஸ்-2 துணை தேர்வு எழுதியவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை 17ம் தேதி முதல் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Exam - updatenews360

10ம் வகுப்பு துணை தேர்வு மறுகூட்டல், பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணை தேர்வுகளுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பின்னர் புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மேலும் கூடுதல் விவரங்களை தேர்வு எழுதியவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 28

0

0