நவ.,11ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

3 November 2020, 2:13 pm
tn bus - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக நவ.,11ம் தேதி முதல் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய மக்கள் கொண்டாடும் முதல் பெரிய பண்டிகையாகும். எனவே, வெளியூர்களில் வேலை செய்து வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசின் சார்பாக இயக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது :- வழக்கம்போல கோயம்பேடு, கேகே நகர், மாதவரம், தாம்பரம், பூவிருந்தமல்லி உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பேருந்துகளே இயக்கப்படும். தீபாவளி பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்காக 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரையில், 27,000 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு 14,757 சிறப்புப் பேருந்துகள், நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேவேளையில், நவம்பர் 15, 16, 18 ஆகிய தேதிகளில் தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக 16,026 பேருந்துகள், இயக்கப்படும், எனக் கூறியுள்ளார்.

Views: - 19

0

0

1 thought on “நவ.,11ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Comments are closed.