இது மக்களாட்சி காலத்தில் நடக்கின்ற மன்னர் ஆட்சி என்று உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருக்கினைப்பாளர் சீமான் கலகலப்பாக பதிலளித்துள்ளார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தென் மாவட்டங்களில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் சென்னையிலிருக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் நேரம் வரும் போது வருமான வரி சோதனை நடக்கிறது சகஜம் தான். இந்த சோதனை நாளாக, நாளாக நிறைய நடக்கும்.. (ஜெயலலிதா) அவர்கள் செய்த எல்லா தீமைகளும் இறந்து விட்டதனால் புனிதமாகி விடாது. கருணாநிதி இதுவரை மண்ணில் பிறக்காத மாதிரியும், தமிழினத்திற்கு அவரை போல யாரும் செய்யாத மாதிரியும் பேசிக் கொண்டு வருகின்றனர். ஓர் ஆண்டுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்த பணம் எது? நாட்டில் அத்தனை கேடு கெட்ட திட்டத்துக்கும் வேர் தேடி போனால் திமுக தான் இருக்கும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வாறு நடக்கவில்லை. ஆண்டு முழுக்க பிறந்தநாளை கொண்டாடுவது எந்த மாநிலத்தில் நடக்கின்றது. அந்த குழுவின் தலைவர்களாக அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்கள் மக்கள் பிரச்சனையை கவனிப்பார்களா? கீழ் பவானியில் விவசாயிகள் ஆறாவது நாளாக பட்டினி கிடக்கின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள் போய் பார்க்கவில்லை. பரந்தூர் விமான நிலையம் 320 நாட்களாக போராடுகின்றனர். யாரும் போய் பார்க்கவில்லை.
உலகத்திலேயே யாரும் கொடுக்காத ஆட்சியை நீங்கள் (திமுக) கொடுப்பதாக பேசி வருகின்றனர். கருணாநிதி போல தமிழ் இனத்திற்கு துரோகம் செய்த ஒரு தலைவர் இன வரலாற்றில் உண்டா? அண்ணாக்கு பின் இந்த நாட்டில் ஊழல், மதுவினை தொடங்கியவர்கள் இவர்கள், கருணாநிதிக்கு மாவட்டத்திற்கு ஒரு சிலை வைத்து கல்யாண மண்டபம், நூலகம் மற்றும் பேனா சிலை வைத்தால் அவர் புனிதராகி விடுவாரா? வரலாறு அப்படி பதிவு பண்ணிவிடுமா.. மாறி மாறி இவர்களே புனிதர் பட்டம் திட்டிக்க வேண்டியது தான்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சின்னு இருக்குது.. இதில் தம்பி துணை முதல்வர் ஆனால் என்ன சொல்வது என்று புரியவில்லை… வரட்டும் இது மக்களாட்சி காலத்தில் நடக்கின்ற மன்னர் ஆட்சி.. அப்பா, மகன், பேரன்… இதை கடந்து செல்லவேண்டியது தான் என்றார்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.