கோவையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆயுர்வேத சிகிச்சை … இன்னும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற முடிவு

Author: Babu Lakshmanan
19 October 2021, 11:07 am
OPS Advice- Updatenews360
Quick Share

கோவை : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு வந்து, புத்துணர்வு சிகிச்சை பெறுவது வழக்கம். இதுவரையில் 5க்கும் மேற்பட்ட முறை அவர் கோவைக்கு வந்து, சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கோவை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நேற்றிரவு முழுவதும் தங்கியிருந்த அவருக்கு, இன்று காலை ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது.

புத்துணர்வு சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகளை பெறும் ஓ.பன்னீர்செல்வம், இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது. ஓபிஎஸின் வருகையையொட்டி, அதிமுக முக்கிய பிரமுகர்கள் அவரை நேரில் சந்திப்பார்கள் என்றும் தெரிகிறது.

Views: - 261

0

0