எல்லாம் போச்சு… தமிழக அரசு இவ்வளவு மெத்தனமாவா இருக்கறது… ஓபிஎஸ் வேதனை..!!

Author: Babu Lakshmanan
24 August 2021, 5:49 pm
OPS Slams Dmk -Updatenews360
Quick Share

தமிழக அரசின் மெத்தனப் போக்கினால் ரூ.2000 கோடிஇழப்பு ஏற்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தரவேண்டிய ரூபாய் 2,000 கோடியை பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசிடம் நெல் அரவை நிலுவைத் தொகையைப் பெற நுகர்பொருள் வாணிபக் கழகம் துரிதமாக செயல்படவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கும் சீசனில் நெல் கொள்முதல் அதிகரிக்க திமுக அரசு முயல வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் நெல் கொள்முதலுக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படவில்லை என்பதே உண்மை. நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி துரித கதியில் செயல்பட வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 282

0

0