உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி வாய்ஸ் கொடுப்பதா…? கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

8 July 2021, 12:00 pm
ops - yediyurappa - updatenews360
Quick Share

சென்னை ; மேகதாது அணை கட்டுவதை யாராலும்‌ தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர்‌ தன்னிச்சையாக அறிவித்திருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- உச்ச நீதிமன்றத்திற்கு இணையான காவேரி நடுவர்‌ மன்றத்தின்‌ இறுதி ஆணையை முற்றிலும்‌ அவமதிக்கும்‌ வகையிலும்‌, இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ உள்ள நிலையிலும்‌, தமிழ்நாடு நீர்வளத்‌துறை அமைச்சர்‌ மத்திய நீர்வளத்‌ துறை அமைச்சரைச்‌ சந்தித்தப்‌ பிறகும்‌, அணை கட்டப்படும்‌ என்று கர்நாடக முதல்வர்‌ அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

அணை கட்ட 2014-இல்‌ கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார்‌ செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே அதனைத்‌ தடுத்த நிறுத்த வேண்டுமென்றும்‌, அணை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும்‌ எடுக்கக்‌ கூடாது என்றும்‌ கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும்‌ என்றும்‌ எந்த நீர்‌ திட்டத்திற்கும்‌ மத்திய அரசு அனுமதி வழங்கக்‌ கூடாது என்றும்‌ வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில்‌ 2 தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்‌ கூடுதல்‌ மனு ஒன்றும்‌ தாக்கல்‌ செய்யப்பட்டுள்ளது.

அணை கட்டுவதை யாராலும்‌ தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர்‌ தன்னிச்சையாக அறிவித்திருப்பதற்கு அதிமுக சார்பில்‌ கண்டனம்‌ தெரிவித்துக்‌கொள்கிறேன்‌. எனவே, தமிழ்நாடு முதல்வர்‌ இதில்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி அணை கட்ட கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும்‌ எடுக்காத வகையில்‌ சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 143

0

0