ஜல்லிக்கட்டு தடை உடைப்பு… மருத்துவக் கல்லூரிகள் அமைப்பு : அதிமுக – பாஜக கூட்டணியின் சாதனைகள்.. ஓபிஎஸ் பேச்சு!!!

Author: Babu Lakshmanan
30 March 2021, 2:10 pm
OPS - updatenews360
Quick Share

திருப்பூர் : தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமாக அமைந்ததே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி , திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வந்தார். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :- 2023ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் காரணமாக அமைந்ததே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்துவிட்டது. நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு சென்று விட்டது.

காங்., – திமுக கூட்டணி ஆட்சியால் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. 24 மணிநேரத்தில் 4 துறைகளின் அரசாணைகளை பிறப்பித்து ஜல்லிக்கட்டு தடையை உடைத்தவர் பிரதமர் மோடி. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுமதி கொடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெறுவதே போராட்டமாக இருந்தது, எனக் கூறினார்.

Views: - 65

0

0