ஒமைக்ரான் கொரோனா எதிரொலி; 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு

Author: Udhayakumar Raman
28 November 2021, 11:10 pm
Quick Share

ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஓமைக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு தமிழக பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீன நாட்டு பயணிகளுக்கும், அதேபோல் மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நெகடிவ் வந்தாலும் மீண்டும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். இல்லை எனில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை நெகட்டிவ் என்று வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை. பரிசோதனையில் ‘ஒமைக்ரான்’ கொரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.

Views: - 201

0

0